வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இராணுவத்தின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள நீர், சுற்றாடல் மற்றும் விவசாய பாதுகாப்பு அமைப்பின் சந்திப்பில் பங்கேற்குமாறு ஆளுநர் தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.
இராணுவத் தரப்பின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுவதால் தன்னால் அதில் கலந்துகொள்ள முடியாதென ஆளுநரின் செயலாளருக்கு விக்னேஸ்வரன் கடிதம்மூலம் அறிவித்துள்ளார்.
” வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. எனவே. இராணுவத்தின் பங்குபற்றலுடன் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்க முடியாது.” – எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews