தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் உட்பட மூவரினை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தமையை வன்மையாக கண்டிப்பதாக வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (23) கைதாகிய செல்வராஜா கஜேந்திரன் , நேற்றையதினமே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பார்.
இந்நிலையில் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வெளியிட்ட கண்டன அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது எமது அடிப்படை உரிமை, அதிலும் அகிம்சை வழியில் எமது இனத்தின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த தியாகி திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
Leave a comment