Pavi
செய்திகள்அரசியல்இலங்கை

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் போக்குவரத்து திட்டம்!!

Share

அடுத்த ஆண்டளவில் “சஹசர ” திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது கருத்து தெரிவித்த அவர்,

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் 2000 தனியார் பஸ்களுக்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.

இச் செயலியின் மூலம் மக்கள் அன்றாட பயணங்களுக்கு அழைத்து செல்லும் பஸ் வரும் நேரம் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான தகவல்களை பெற முடியும் என்றார்.

இதேவேளை கொழும்பில் மின்சாரத்தால் இயக்கப்படும் பஸ் வண்டியை விரைவில் அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், முதலில் குறுந்தூர போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்து வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படும் போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...