500x300 1724416 4 year old girl beaten to death by parents 1
இந்தியாசெய்திகள்

சரியாக படிக்கவில்லை! – குழந்தை பெற்றோரால் அடித்து கொலை

Share

ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பம் மாவட்டம் பிரிகொரா கிராமத்தை சேர்ந்த உத்தம் மைத்தி (27). அவரது மனைவி அஞ்சனா மஹடொ (26). இந்த தம்பதிக்கு 4 வயதில் மகள் உள்ளார். 4 வயதான அந்த பெண் குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்தில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.

ஆனால், குழந்தை சரியாக படிக்காமல் விளையாடுவதாக பெற்றோர் கருதியுள்ளனர். சரியாக பாடம் படிக்கும்படி கூறியும் குழந்தை படிக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோர் குழந்தையின் கைகளை கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில், குழந்தை மயக்கமடைந்துள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உயிரிழந்த குழந்தையை எடுத்துக்கொண்டு சல்கஞ்ச்ஹரி நகரில் இருந்து ரெயிலில் ஏறி ஹலுதி நகருக்கு சென்றுள்ளனர். அங்கு ரயில் நிலையம் அருகே இருந்த முட்புதருக்குள் குழந்தையை வீசிவிட்டு தம்பதி வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஜூன் 29-ம் தேதி நடந்த நிலையில் ஒரு வாரம் கழித்து தம்பதி தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த தம்பதியிடம் குழந்தை எங்கே என அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். அதற்கு இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் கடந்த செவ்வாய்கிழமை கணவன் – மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சரியாக படிக்காததால் தங்கள் 4 வயது மகளை கடுமையாக தாக்கியது, அதில் குழந்தை உயிரிழந்ததையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து கணவன் மனைவியை கைது செய்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...