நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ டின்சின் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ கெம்பியன் வரையிலான பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரியும், குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த வாரங்களில் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
16 கிலோ மீற்றர் தூரத்தினைக் கொண்டதாக, குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் கடந்த 03 வருடகாலமாக முன்னெடுத்து வருகின்றபோதிலும் அபிவிருத்தி பணிகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் அவதியில், வீதியின் அபிவிருத்தியை இடைநிறுத்த வழங்கப்பட்ட தரகு தொகை எவ்வளவு, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியை விரைவாக சீர் திருத்து போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஹட்டன் பொகவந்தலாவ பேருந்து சாரதிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் டின்சின் நகர வர்த்தக உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
#SrilankaNews
Leave a comment