pro
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளால் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

Share

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்யுமாறு கோரியும், விவசாயிகளின் இரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டவை தொடர்பிலும், கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வலி. வடக்கு பிரதேசத்தை சேர்ந்த மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக  முன்னாள் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் வ.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வீட்டுத் திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியவாறு தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் தம்மால் இயலாதவிடத்து பொறுப்பானவர்கள் உடனடியாக அளிக்கவேண்டும் என்றும் இதன்போது குறிப்பிட்டனர்

குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வடமாகாண ஆளுநர் ஊடாக பிரதமருக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் இருக்கும் வழங்கவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

pro 2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...