ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக யாழ்.சங்கானையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
பண்ணாகம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு அருகில் இந்த ஆரப்பாட்டம் தேங்காய் உடைத்து ஆரம்பமானது.
பின்னர் பேரணி சித்தன்கேணி சந்தியூடாக சங்கானை நகரினை சென்றடைந்த்து. அங்கும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாடத்தின்போது பதாதைகள் மற்றும் சுலோகங்களை தாங்கியிருந்தனர். யாழ் மாவட்ட அமைப்பாளர், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
#SriLankaNews
Leave a comment