தீர்வு காண்பதில் தாமதம்! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!
.கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துகிறது.
இதனால் மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருத்தமான கொவிட் தடுப்பூசிகளை வழங்கி, மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திறந்து அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.
மேலும் நாட்டில் வறுமையால் வாடும் பிள்ளைகள் பல தசாப்தங்களாக அனுபவித்த இலவச கல்வியை இழந்துள்ளமை வேதனைக்குரிய விடயமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment