“நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே இந்த அரசாங்கத்தால் சர்வதேசத்தை வெல்ல முடியும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. நல்லாட்சி மலர்ந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
ஆனால் அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக இந்நிலைமை தற்போது மாற்றப்பட்டுள்ளது. எல்லா அதிகாரங்களும் நிறைவேற்று ஜனாதிபதியின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் ஜனநாயகம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இப்போது தொடர் தோல்விகள் ஏற்படுவதற்கும் இந்த 20 திருத்தச் சட்டமும் காரணமாகும். எனவே, ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாத்தால் மாத்திரமே சர்வதேசத்தை வெல்லமுடியும்.” – என்றார்.
Leave a comment