தூக்கில் தொங்கி பெண் மரணம்!
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் நேற்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் பிரதீபன் புஸ்பராணி எனும் இரண்டு பிள்ளைகளின் தாயாரே (வயது-32) உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். முடிவுகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment