நாடு கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் சிவப்பு வலயத்திலேயே இருக்கின்றது. இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கொவிட்-19 வைரஸ் பரவலில் சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் வ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நாட்டு நிலைமையில் கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் நாளொன்றில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டே இலங்கை சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட இன்னும் ஒரு வாரம் வரை செல்லும். அத்துடன் இவ் எச்சரிக்கையில் இருந்து மீண்டு, பச்சை வலயமாக பிரகடனப்படுத்தப்பட நாளொன்றுக்கு இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 950 வரை குறைய வேண்டும்.
கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போது அவ் எண்ணிக்கை குறைவடைந்து வருவதைக் காணமுடிகின்றது என்று தெரிவித்துளளார்.
Leave a comment