newvirus
செய்திகள்உலகம்

உலகளவில் கொரோனாத் தொற்று 25 கோடியாக அதிகரிப்பு!!

Share

உலகளவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் செயல்பட்டு வந்தாலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்திருக்கிறது.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனாவால் 4.64 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.53 லட்சம் பேர் சாவடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.46 கோடி பேர் கொரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.59 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் சாவடைந்துள்ளார்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக பிரேசில்- 2.21 கோடி , இங்கிலாந்து – 92.84 லட்சம் , ரஷியா – 85.7 லட்சம், துருக்கி – 81.32 லட்சம், பிரான்ஸ் -73.48 லட்சம் , அர்ஜென்டினா- 52.85 லட்சம் , ஈரான்- 59.94 லட்சம் , கொலம்பியா – 50.39 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சாவடைந்தவர்களின் எண்ணிக்கை – பிரேசில் (6,09,099) இந்தியா (4,59,851), மெக்ஸிகோ (2,89,259), பெரு (2,00,350), ரஷியா (2,39,403), இந்தோனேசியா (1,43,433), இங்கிலாந்து (1,42,650) இத்தாலி (1,32,164), கொலம்பியா (1,27,451), பிரான்ஸ் (1,18,820) ஈரான் (1,27,875) , அர்ஜென்டினா (1,16,986) என தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் தொற்றால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 50.7 இலட்சமாக உயர்ந்திருக்கிறது.
அத்தோடு தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24.42 கோடி என தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க இதுவரை 718 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...