நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது பெரும் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.” – என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் பாரதூரமான நிலைமை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. எனவே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வைரஸின் பாரதூரத்தன்மையை மக்கள் மறந்துவிட்டனர். அது தொடர்பில் அவர்களை தெளிவுபடுத்த வேண்டும்.
இந்தியாபோன்ற நாடுகளில் வைரஸ் பரவல் தலைதூக்கியுள்ளது. இதனால் மாநிலங்கள் முடக்கப்பட்டுவருகின்றன. எமது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டை முடக்கினால் ஏற்படும் பாதிப்புகளை இலகுவில் கணித்துவிடமுடியாது.
அதேவேளை, எதிர்காலத்தில் கொரோனா மரண வீதமும் அதிகரிக்கும்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment