சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அங்கு 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
மேலும் 14 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 95,986 ஆக உயர்ந்துள்ளது. .
Leave a comment