uppu
செய்திகள்உலகம்

உப்பு நீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை!

Share

உப்பு நீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை!

கொரோனாத் தொற்றைக் கண்டறிய புதிய பரிசோதனை முறை ஒன்றை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இந்திய மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்றைக் கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி பி.சி.ஆர். சோதனை செய்யும்முறை இந்தியாவின் ஊரக மற்றும் பழங்க பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் கொரோனாத் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, கொவிட் – 19 இன் மாதிரிகளை பரிசோதிக்கும் உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து பி.சிஆர். சோதனை செய்யும் முறை காணப்படுகிறது.

வேகமான – மிகவும் எளிதான குறைந்த கட்டணத்திலான நோயாளிகளுக்கு உகந்த வகையில் இது காணப்படுகிறது. அத்துடன் பரிசோதனையின் முடிவுகளும் உடனடியாகவும் கிடைக்கப் பெறுகின்றன.

இந்த உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி பி.சி.ஆர். சோதனை செய்யும் முறையை நாடு முழுவதும் குறிப்பாக வளங்கள் குறைந்த நாடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதன்மூலம் விரைவான மற்றும் மக்களுக்கு சிறந்த வகையில் பரிசோதனைகள் செய்யப்படுவதுடன் தொற்றுக்கு எதிரான நமது போராட்டமும் வலுப்பெறும் என்று கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...