எதிர்வரும் பெப்ரவரி மாத முடிவுக்குள் ஐரோப்பாவில் ஐந்து லட்சம் மக்கள் கொரோனாத் தொற்றால் உயிரிழக்க வாய்ப்புக்கள் உள்ளன என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
அண்மைக்காலமாக ஐரோப்பாவில் குறைவடைந்து வந்த கொரோனாவின் பாதிப்பு நிலைமைகள், தற்போது சில நாடுகளில் மீண்டும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பாவுக்கான இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 53 நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனாத் தொற்று நிலைமை மிகவும் கவலையளிக்கிறது, இங்கு தற்போதைய நிலைமை தொடருமாயின், பெப்ரவரி மாதத்திற்குள் மேலும் 5 லட்சம் இறப்புகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. என்று தெரிவித்துள்ளார்.
#World
Leave a comment