நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை மேலும் கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்பதுடன், விசேட சோதனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையில் பயணிக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment