மட்டக்களப்பு -வாகரை ஓமடியாமடுவில் பன்சாலை ஒன்றில் இடம்பெற்ற யானைவெடி வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேரர் ஒருவர் காயமடைந்த நிலையில் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாகஸ்த்தன வெலிக்கந்தவைச் சேர்ந்த சிசிரகுமார (வயது- 27) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த இடத்திற்குச் சென்ற ஏழு இளைஞர்களுக்கும் ஓமனியாமடு விகாராதிபதிக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது இளைஞனின் வயிற்றில், யானைகளை விரட்டப்பயன்படுத்தும் வெடிபட்டதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி இ.சிகாப்தின் விசாரணைகளை மேற்கொண்டார்.
வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.