மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, சுகாதார வழிகாட்டல்களின் கீழ், கடந்த முதலாம் திகதியுடன் தளர்த்தப்பட்டிருந்தது.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை நீக்காதிருக்க கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளது.
Leave a comment