இந்தியாவின் பல மாநிலங்களையும் கனமழையுடனான காலநிலை பாதித்து வருகிறது.
கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த சில நாட்களாத் தொடர்மழை பெய்துவரும் நிலையில், அங்கு அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கொடைக்கானலில் 20 இற்கும் மேற்பட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கு பிரதான வீதிகளில் 20 இற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் அடுக்கம்-பெரியகுளம் வீதிகளில் அதிக வெள்ளம் ஏற்பட்டதால், அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் நெடுஞ்சாலைத் துறையினர் வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#india
Leave a comment