விவசாயிகளால் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தின் அருகே இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது.
இந்தியாவின் அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டலியில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அச்சடலத்தில் இடதுகை மணிக்கட்டு வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை தடுப்பு வேலியில் ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையிலேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிங்கு எல்லையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்ட பகுதிக்கு அருகில் இச்சடலம் மீட்கப்படுள்ளது.
மேலும் இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இந்த கொடூர கொலை சீக்கியக் குழுவான நிஹாங்ஸ்களால் நடத்தப்பட்டிருக்குமென சந்தேகிக்கப்படுகின்றது.
சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி, அந்தஇளைஞரை நிஹாங்ஸ் குழு அடித்து கொன்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் சோனிபட் பொலிஸார் அந்த சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இக் கொலை தொடர்பில் பொலிஸ் தரப்பில் எதுவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment