யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி குகசிறி குமாரதாஸ மாப்பாண முதலியாரின் இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றன.
இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து, பூதவுடல் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகி கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலை இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக் கிரியைகள் இன்று நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றன.
அரசியல் பிரமுகர்கள், ஆலய தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த குமாரதாஸ மாப்பாண முதலியார், 1964 டிசம்பர் 15 முதல் இறக்கும் வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகியாக பணியாற்றி கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment