கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் 02வது ஆண்டு பூர்த்தியாகின்றது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஸ, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து நவம்பர் 18 ஆம் திகதி அனுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்குத் தட்டுப்பாடு என்று நாட்டில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன.
தற்போது இரண்டு ஆண்டுகளில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.
இரு ஆண்டுகளில் ஜனாதிபதியாக கோட்டாபய சாதித்தவை என்னவென்று சிந்திக்க வைக்கிறது என மக்கள் விசும்புகின்றனர்.
Leave a comment