இந்த ஆண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் பிளாக்பர்னைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான கென் ஜென்சன், ‘அச்சோ!’ என்ற தலைப்பில் பதிவேற்றிய குரங்கின் புகைப்படத்திற்காக ஒட்டுமொத்த வெற்றியாளர் விருதைப் பெற்றார்.
இப்புகைப்படமானது சீனாவின் யுனான் மாகாணத்தில் எடுக்கப்பட்ட கோல்டன் சில்க் இன குரங்கின் புகைப்படமாகும்.
இவ்வாண்டின் போட்டியின் மூலம் கிடைக்கும் மொத்த நிகர வருவாயில் 10 சதவீதம் போர்னியோவில் உள்ள குனுங் பலுங் தேசியப் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்டு ஒராங்குட்டான்களைப் பாதுகாக்க நன்கொடையாக வழங்கப்பட இருக்கிறது.
நகைச்சுவை வனவிலங்குப் போட்டிக்காக 7000 நகைச்சுவையான வனவிலங்குகள் தொடர்பான புகைப்படங்கள் பதிவேற்றபட்டிருந்த நிலையில், சீனாவின் யுனான் மாகாணத்தில் எடுக்கப்பட்ட கோல்டன் சில்க் இன குரங்கின் புகைப்படத்திற்கே கிடைத்துள்ளது.
#world
1 Comment