KABIR
செய்திகள்அரசியல்இலங்கை

வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டால் ஒத்துழைப்பு வழங்கலாம்! – கூறுகிறார் கபீர் ஹாசீம்

Share

அரசு வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டால், நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பிரிவினருக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு இன்று மத்திய வங்கி கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டுமாறு நாம் ஒன்றரை வருடங்களாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் பஸ் சென்ற பிறகு பயணத்துக்கு தயாராகுவதுபோல, தற்போதுதான் அது பற்றி அரசு சிந்தித்துள்ளது.

இந்த அரசிடம் வெளிப்படைதன்மை இல்லை. அதனால்தான் சர்வக்கட்சி மாநாடு எனக் கூறிக்கொண்டு, தற்போது பொருளாதார சபையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டால், நாட்டை மீட்க ஒத்துழைப்பு வழங்குவோம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...