தமிழகத்தில் அதிக மழையால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் சென்னையில் காற்றுடன் அதிக மழையால் 11 சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், 7 வீதிகளின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் வீதிகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று இரவில் இருந்து அங்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை மழையின் அளவு அதிகரித்தது.
இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
இதனால் 11 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. 7 வீதிகளின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக்க தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Leave a comment