cc96d0ea office
செய்திகள்அரசியல்இலங்கை

பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள அரச பணியாளர்கள்!

Share

அரச பணியாளர்களது சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில் சம்மேளத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.ஏ.பீ. பஸ்நாயக்க இம்முறை பட்ஜெட்டில், அரச பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரச பணியாளர்கள் கடும் பொருளாதார பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளனர்.

மாதாந்தம் அவர்களது சம்பளத்தை 16,000 ரூபாயாகவும் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கோரிக்கை அரசாங்கம் நிறைவேற்றாதபட்சத்தில்  எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...