china 3
செய்திகள்உலகம்

சீனாவின் அடுத்த நகர்வு -ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள்

Share

சீனாவின் அடுத்த நகர்வாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் வழங்குவதாக தெரிவித்ததுள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள மக்களுக்காக 100 கோடி தடுப்பூசிகளை சீனா வழங்குவதாக தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ம் திகதி முதல்முறையாக ஒமிக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் இது மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக உலக நாடுகள் தென்ஆப்பிரிக்கா மற்றும் அதை அண்டியுள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுக்காக்கும் வகையில் சீனா இதுவரை சர்வதேச விமானப் போக்குவரத்தைக் கூட தங்கள் நாட்டிலிருந்து தொடங்கவில்லை.

இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

26 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயணிகள் பயன்படுத்துவது பேருந்துகள் அல்ல லொறிகளே..! பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு...