சீனாவும் இந்தியாவும் விளக்கம் தரவேண்டும் என அலோக் ஷர்மா தெரிவித்துள்ளார்.
நிலக்கரி தொடர்பான பயன்பாடுகள் குறித்து விளக்கம் தரவேண்டும் என கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா கூறியுள்ளார்.
குறிப்பாக சீனாவும் இந்தியாவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு விளக்கம் தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் காலநிலை மாநாட்டில், மின்சாரத் தயாரிப்புக்கு நிலக்கரியைப் பயன்படுத்துவதை முற்றிலும் கைவிடுவது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
எனினும், சீனா மற்றும் இந்தியா அளித்த நெருக்கடி காரணமாக, நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைப்பது என்று திருத்தம் செய்யப்பட்டது.
இதனையடுத்து இதுகுறித்து சீனா-மற்றும் இந்தியா விளக்கமளிக்க வேண்டுமென கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment