ஏரிகளை ஆய்வு செய்யும் தமிழக முதல்வர்

stalin455r 1552898171

Chief Minister

இந்தியா சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருவமழை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை ஆய்வு செய்யவுள்ளதாக, தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை குறித்த ஏரிப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின், இது குறித்து கள ஆய்வு செய்யவுள்ளார்.

பருவமழைக்காலங்களில் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் நிரம்பும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதாக, அங்கு பாரியளவில் பாதிப்புக்கள் பதிவாகின.

இந்நிலையிலேயே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரி தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அங்கு விஜயம் செய்கிறார்.

இதன்போது புழல் ஏரியின் நிலை தொடர்பிலும் அவர் ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#INDIA

Exit mobile version