2021 ஐ.பி.எல் தொடரின் முதலாவது தகுதிப் போட்டியில் இன்று டெல்லி கப்பிட்டல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள்
மோதுகின்றன.
டுபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றியீட்டும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
தோல்வியடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.
நாளைய தினம் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இப் போட்டியில் வெற்றியீட்டும் அணி, இன்று இடம்பெறும் போட்டியில் தோல்வியடையும் அணியுடன் மோதும்.
இந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இறுதிப் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி டுபாயில் இடம்பெறும்.
Leave a comment