எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்களுக்கு வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்ட நிமலதாஸ், கஜிபன் ஆகிய இருவரும் இந்திய எல்லைக்குள் கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து, கைதாகினர்.
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையினர் கைது செய்து, நாகப்பட்டினம் கடற்படை முகாமுக்குக் கொண்டுசென்றனர்.
பின்னர் மீனவர்களை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீனவர்கள் இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
#SrilankaNews