chennai
செய்திகள்இந்தியா

மீண்டும் சேவையை தொடங்கிய சென்னை விமான நிலையம்

Share

சென்னை விமான நிலையம் தனது உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கியது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ,புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 65 பயணிகளுடன் முதல் விமானமாக இன்று மாலை 6.18 மணிக்கு தரையிறங்கியது

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதன் காரணத்தால் சென்னைக்கு வந்த விமானங்கள் பெங்களூா்,ஹைதராபாத் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.

ஆனால் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.

கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமானங்களை தரையிற கூடாது என்று இந்திய விமானநிலைய ஆணையம் தடை விதித்த நிலையில் அத்தடையை மாலை 6 மணியுடன் இந்திய விமானநிலைய ஆணையம் விலக்கிக் கொண்டதையடுத்து,

புனேவிலிருந்து முதல் விமானம் 65 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 6.18 மணிக்கு சென்னைவிமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லி,மும்பை,மதுரை,கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்து தரையிறங்கின .

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...