அமெரிக்காவில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக சாத் பூஜை இடப்பெற்றுள்ளது.
இந்தியாவின் வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக சாத் பூஜை கொண்டாடுவது வழமை.
சாத் விரத பூஜை பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களில் கொண்டாடப்படும் விழாவாகும்.
இந்து மத விழாவான சாத் விரத பூஜை சூரிய கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி செலுத்துவதற்கு நடத்தப்படுகிறது .
நான்கு நாட்களுக்கு இந்த பூஜை நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சாத் விரத பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.
அமெரிக்காவில் வாழும் வட இந்தியர்கள் மற்றும் பலரும் நேற்று சாத் விரத பூஜையில் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவின், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள தாம்சன் பூங்காவில் ஒன்று கூடிய வடஇந்திய பெண்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக சாத் விரத பூஜை நடத்தினர்.
விழாவுக்கான் ஏற்பாடுகளை வட அமெரிக்காவில் உள்ள பீகார்- ஜார்க்கண்ட் அமைப்பு ஒழுங்கு படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment