நாட்டில் கொரோனாத் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கல்கிசை பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காட்போட் சவப் பெட்டிக்கு வெளிநாடுகளிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன.
கல்கிசை பகுதியின் ,மாநகர சபை உறுப்பினர் பிரியந்த சகபந்து வியட்நாமிலிருந்து பிரேதப் பெட்டிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தாய்லாந்திலிருந்து 1000 காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவை வரும் திங்கட்கிழமை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
மேலும் கொரோனா சடலங்களுக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு இலங்கையில் தற்போது பெரும் கேள்வி நிலவுகின்ற நிலையில் பெட்டி ஒன்றின் விலை சுமார் 2 ஆயிரம் ரூபாவில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றது.
Leave a comment