Basil 1
செய்திகள்அரசியல்இலங்கை

#Breaking பட்ஜெட் 2022 இரண்டாம் வாசிப்பு: மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Share

2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இன்று மாலை 05.10 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 13 சனிக்கிழமை முதல் இன்று (22) வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி. சில்வா இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்தார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று மாலை பதிலளித்து உரையாற்றினார்.

நாளை (23) முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை 16 நாட்கள் இந்த விவாதம் நடைபெறும்.

டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 05.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...