Vimal
செய்திகள்அரசியல்இலங்கை

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரந்த கூட்டணி அவசியம்! – விமல் வீரவன்ச

Share

” எதிரணி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு, பலமான கூட்டணியாக பயணிக்க வேண்டிய தருணத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய இணக்கப்பாட்டுடன் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரந்த கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தருணமே இது.

எனவே, இருப்பவர்களையும் அகற்றிவிடக்கூடாது. அதேபோல தனிநபர்மீது பழிகளை சுமத்தாமல், உண்மை நிலை அறிந்து விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.” – எனவும் விமர் வீரவன்ச குறிப்பிட்டார்.

அத்துடன், மைத்திரிபால சிறிசேன அரசை விமர்சிப்பது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அது 2015 முதல் 2017வரையான காலப்பகுதியில் ஆற்றிய உரையாக இருக்கலாம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...