மட்டக்களப்பு பெரிய உப்போடையில் உள்ள களப்பு பகுதியில் மீனவர் ஒருவரின் 6 லட்சம் ரூபா பெறுமதியான படகுக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தீயால் சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க பெறுமதி வாய்ந்த படகு மற்றும் வலை இயந்திரம் உட்பட அனைத்தும் முற்றாக கருகி நாசமடைந்துள்ளன.
இன்று அதிகாலையில் தொழிலுக்காக மீனவர்கள் கடற்கரைக்கு சென்ற போதே படகு இவ்வாறு தீப்பற்றி எரிவதை அவதானித்துள்ளனர்.
மட்டக்களப்பு நாவலடியை சேர்ந்த மீனவர் ஒருவருடைய படகே இவ்வாறு இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
Leave a comment