சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை!!
இலங்கையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என விசேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனாத் தொற்றாளர்களில் இதுவரை சிறுவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் எவையும் இல்லை. எனினும் சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இதன் அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கறுப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டால் முதலில் முகம் வீங்கும், காய்ச்சல் , தலைவலி, மூக்கின் உட்புறத்தில் கறுப்பு நிறத்தில் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே இவற்றை கவனிக்காது விட்டால் கண்கள் பாதிக்கும். கண்களைப் பாதித்தால் கண்பார்வை இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட நேரிலும்.
எதுவித சிகிச்சையளித்தாலும் இழந்த பார்வையை மீள பெற முடியாது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அறிகுறிகள் சிறுவர்களிடையே தென்பட்டால் உடனடியான வைத்தியசாலை அழைத்துச் செல்லுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.