ks az1
செய்திகள்இந்தியா

பா.ஜ.க என்ற பலூன் விரைவில் வெடிக்கும் – அழகிரி!!

Share

பா.ஜ.க என்ற காற்றடைத்த பலூன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“ராகுல் காந்தி இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான தலைவர். மோடி புதிய விவசாய சட்டத்தை கொண்டு வந்தபோது, மதுரைக்கு வந்த ராகுல் காந்தி, இன்னும் 1 வருடத்தில் இந்த மோடி அரசாங்கம் விவசாய சட்டத்தை திரும்பப்பெறும் என்று கூறினார்.

அது போலவே நடந்தது. மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம், கலாசாரம் சீரழிந்துள்ளது. இதனை சரி செய்யும் ஆற்றல் ராகுல் காந்தியிடன் தான் உள்ளது.

தமிழகத்தில் தற்போது விடியல் ஏற்பட்டுள்ளது. தவறு நடக்கும் இடத்திற்கு முதல்வர் செல்கிறார், தவறானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது, சொந்த கட்சிக்காரர்கள் தவறு செய்தால் கூட கண்டிக்கப்படுகிறார்கள்.

இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்தியாவின் மாடலாக தமிழகம் திகழ்கிறது. மேலும் பல சீர்திருத்தங்கள் தமிழகத்தில் வேண்டும். குறிப்பாக விவசாயம் , தொழில், கல்வி போன்ற துறைகளில் சீர்திருத்தம் தேவை.

ஜனவரி 7,8,9 ஆகிய திகதிகளில் ஏலகிரியில் தமிழக காங்கிரஸ் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த முகாம் நடத்தப்படும்.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதற்கு மீண்டும் அடைப்பு என்பது தேவையில்லாத ஒன்று. முகக் கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்துவது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

#WorldNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...