இலங்கையில் மட்டுமல்ல இந்தியா உட்பட மேலும் பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது ‘மெனிக்கே மகே ஹித்தே….’ என தொடங்கும் சிங்கள பாடல்.
சமூகவலைத்தளங்களையும் அப்பாடல் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது. வரிகள் மாற்றியமைக்கப்பட்டு பிறமொழிகளிலும் பாடப்பட்டது. தற்போது அரசியல் களத்திலும் அப்பாடல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தியாவின் பிரதான அதேபோல ஆளுங் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் (BJP) உத்தர பிரதேச தேர்தல் பிரசார பாடலாக ”மெனிக்கே மகே ஹித்தே” பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமைத்துவத்தையும், கட்சியையும் போற்றும் விதத்தில் வரிகள் மாற்றப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தின் தேர்தல் எதிர்வரும் மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment