vaiko
இந்தியாசெய்திகள்

பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும்! – வைகோ கோரிக்கை

Share

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பியவர் பாவேந்தர் பாரதிதாசன். பெரியாரால், சிந்தை இனிக்கும் செந்தமிழ் கவிஞராகப் போற்றப்பட்டார். தம் வாழ்நாள் எல்லாம் தமிழுக்காகப் போராடினார். அவரது பிறந்தநாளை, தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வில், வீரமணி அருமையான கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு வைத்தார்.

யாரும் கேட்காமலேயே பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் ஆகவும், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாள் ஆகவும் அறிவித்து, அரசு ஊழியர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து வரலாறு படைத்த முதலமைச்சர், வீரமணியின் கோரிக்கையை ஏற்று, பாரதிதாசன் பிறந்தநாளை (ஏப்ரல் 29ஆம் திகதி) கொண்டாடுவதும், அந்த எழுச்சியின் அடிப்படையில் எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்… இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்று உறுதி பூணுவதும், காலத்தின் கட்டாயமாக உள்ளது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...