ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை.
இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுபான சாலைகள் திறக்கப்பட்டமை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு பொருத்தமான செயற்பாடல்ல. சுகாதார அமைச்சால் இது குறித்து எந்தவித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.
மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புக்களே அதிகமுள்ளன.
ஆகவே உரிய அதிகாரிகள் இது குறித்து அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீண்டுமொரு முறை நாட்டை கொரோனா பரவலுக்கு உள்ளாக்க வாய்ப்பளிக்கக்கூடாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment