நோட்டன் – பம்பரகலை தோட்டத்தில் உள்ளக வீதியோரத்தில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சாரதி உட்பட்ட நால்வர் பயணித்த குறித்த முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடொன்றின் வாசல் முன்றலில் வீழ்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சாரதி உட்பட முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
#SrilankaNews
Leave a comment