Selvaraja Kajendran
செய்திகள்அரசியல்இலங்கை

இராணுவ துணைக்குழுவின் தலைவர் டக்ளஸ் – ‘ஈபிடிபி”யை சீண்டிய கஜேந்திரன் எம்.பி

Share

” எங்களுடைய தேசத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறிய அமைச்சர் டக்ளஸின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்தக் கருத்தை நிராகரிக்கின்றேன்.” இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” போதைப்பொருளால் வடக்கு, கிழக்கில் எமது சமூகம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவது தொடர்பில் சிறிதரன் எம்.பி. கருத்து வெளியிடுகையில், அந்த உண்மையை சகித்துக்கொள்ள முடியாத இராணுவ துணைக்குழுவின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொய்யான கருத்தை முன்வைத்தார்.

எங்களுடைய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறுகிறார்.
இதனை மறுக்கின்றேன். பிரபாகரனின் ஒழுக்கம் தொடர்பில் சரத் பொன்சேகா, கமல் குணரட்னம் போன்றவர்களே தெளிவாக கூறியுள்ளனர். எனவே, அவர்களிடம் கேட்டாவது டக்ளஸ் கற்றுக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

செல்வராசா கஜேந்திரன் எம்.பி. பிரபாகரனை தேசியத்தலைவர் என குறிப்பிட்டதால் அதற்கு ஆளுங்கட்சியின் எதிர்ப்பை வெளியிட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...