21 619b9965bcd90
செய்திகள்அரசியல்இலங்கை

கிழக்கில் தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் மதம் மாற்றப்படுகிறார்களா?

Share

முஸ்லிம்களால் திட்டமிடப்பட்ட வகைகளில் தமிழ்ப் பெண்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர் என ஜனாதிபதி செயலணிக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் , இந்து உணர்வாளர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தலைமையிலான செயலணி கடந்த நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு இம்மாவட்ட மக்களின் கருத்துகளை செவிமடுத்து பதிவு செய்து வருகின்றனர்.

இதன்போது தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் தெரிவித்தவற்றை செயலணி பதிவு செய்துள்ளது. அவற்றில் சில வருமாறு,

கிழக்கு மாணத்தில் தமிழ் இந்துக்கள் அதிக பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். முஸ்லிம்களால் திட்டமிடப்பட்ட வகைகளில் மத மாற்றம் செய்யப்படுகின்றனர்.

‘லவ் ஜகாத்’ என்ற கட்டமைப்பு மூலமாக தமிழ்ப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் இலக்கு வைக்கின்றனர்.

வறுமை, தொழில் வாய்ப்பு இன்மை ஆகியவற்றால் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் கடைகளில் வேலை செய்ய நேர்கிறது. இதை முஸ்லிம்கள் வாய்ப்பாக எடுக்கின்றனர். அப்பாவி தமிழ்ப் பெண்கள் காதலின் பெயரால் இவர்களின் வலைகளில் சிக்கி மதம் மாற நேர்கின்றது.

இதே போல பல விதமான சலுகைகளையும் காட்டி தமிழ்ப் பெண்களை வசீகரிக்கின்றனர். தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கின்ற முஸ்லிம் ஆசிரியர்களும் தமிழ் மாணவிகளை மயக்கி எடுக்கின்றனர். தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை மொத்தத்தில் சீரழிந்து விடுகின்றது.

இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் தமிழர்களும், சிங்களவர்களுமே. ஆனால் வந்தேறு குடிகளான முஸ்லிம்கள் நிலத்துக்குச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் முஸ்லிம்களால் திட்டமிடப்பட்ட வகைகளில் கபளீகரம் செய்யப்பட்டு ஊர்களின் பெயர்கள்கூட மாற்றப்பட்டுள்ளன.

அதே போல தமிழ் பாடசாலைகள் பெயர் மாற்றப்பட்டுள்ளன. இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு சந்தைகளாக மாற்றப்பட்டுள்ளன. முஸ்லிம் அதிகாரிகளின் உதவியுடன் இவை நடக்கின்றன.

இது அராபிய நாடு அல்ல. ஆனால் அராபிய கலாசாரம் திணிக்கப்படுகின்றது. காத்தான்குடியை சவூதி அரேபியா போன்று ஆக்கி வைத்துள்ளார்கள்.

காதி நீதிமன்ற முறைமை நமது நாட்டுக்கு தேவை அற்றது. தமிழ் இந்துகளால் பசுக்கள் தெய்வமாக மதிக்கப்படுகின்றன. சிங்கள பௌத்தர்களும் பசுக்களைக் கொல்வதில்லை. ஆனால் இறைச்சிக்காக மாடுகளை முஸ்லிம்கள் அறுக்கின்றனர்.

இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மாடறுப்பு தடைச் சட்டம் அமுலுக்கு வர வேண்டும் எனவும் செயலணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...