ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர் மற்றும் நிறுவனங்களின் 4 ஆவது அமர்வின் தலைவராக சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கொரியாவில் இடம்பெற்றுவரும் மாநாட்டில் 47 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை சார்பாக வைத்தியர் அனில் ஜாசிங்க தென்கொரியாவிற்கு சென்று குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை,குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றபோது அனில் ஜாசிங்க விமான நிலையத்தில் தடுப்பூசி அட்டையினை எடுத்துச் செல்லாமை காரணமாக அவர் நேற்று அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment