ஊழல், மோசடிகளுக்கு எதிராக துணிந்து போராடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று பயணம் மேற்கொண்ட சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து சுகநலம் விசாரித்தார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
” ரஞ்சன் ராமநாயக்க மோசடியில் ஈடுபடும் நபர் கிடையாது. தன்னிடம் உள்ளதைக் கூட மக்களுக்கு வழங்கிய மனிதாபிமானமுள்ளவரே அவர்.
ரஞ்சன் ராமநாயக்க உயர்கல்வி கற்று பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றார். அதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். மீண்டும் அந்த கோரிக்கையை விடுக்கின்றேன்.” – என்றார்.
#SriLankaNews