உலகளவில் ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் மூலம் மிகவும் பிரபலமான இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளது.
அதன்படி இவருக்கு இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான தூதுவராக நியமிக்க சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் தூதுவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளார் என அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதியை பெற அமைச்சரவை பத்திரத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் யொஹானி டி சில்வா இந்தியாவில் தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் பாடல்களைப் பாடவுள்ளார்.
இவரது ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் தற்போது 130 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை செய்துள்ளது.
இலங்கையை சர்வதேசத்துக்கு கொண்டு சென்ற இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு அரச விருது வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment