நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் சர்வக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பு திருப்தியாக அமைந்தது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
மேற்படி சந்திப்பில் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். மறுபுறத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர். சுமார் இரு மணிநேரம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment